விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆந்த்ரே சித்தார்த் 70, இந்திரஜித் 48, பூபதி குமார் 27, முகமது அலி 46 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய திரிபுரா அணி 42.4 ஓவர்களில்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு அணி நிர்வாகத்திடமிருந்து எந்த விதமான நஷ்ட ஈடும் கிடைக்காது என்று தெரிகிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதால், கேகேஆர் அணியில் இருந்து முஸ்டாபிஸுரை நீக்கவேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரின. இதையடுத்து பிசிசிஐ உத்தரவின் பேரில் முஸ்டாபிஸுரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்தது.
கடந்த மாதம், துபாயில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர்...
விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் அமன் ராவ் பெரேலா இரட்டைச் சதம் விளாசினார்.
ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஹைதராபாத், பெங்கால் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அமன் ராவ் பெரேலா 200 ரன்கள் (154 பந்துகள், 12 பவுண்டரி, 13 சிக்ஸர்) விளாசினார்.
பின்னர் விளையாடிய பெங்கால் அணி...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 33 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) குவித்தார்.
முஷீர் கான் 73, யஷஸ்வி...
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் சிறப்பாக விளையாடி சூர்மா ஹாக்கி கிளப் அணியை வென்றது.
ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வீரர் செல்வராஜ் கனகராஜ் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 1-0 என்ற...
டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரன் கணக்கை தொடங்காமலேயே ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பென் ஸ்டோக்ஸை டெஸ்ட்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 முறை பதக்கம் வென்றவர் பி.வி. சிந்து. தொடர்ந்து பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று வரும் பி.வி. சிந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேச சர்க்யூட் பாட்மிண்டன் போட்டியில் விளையாடினார். அப்போது காயம் அடைந்ததால் அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பாட்மிண்டன்...
பிரிட்டனில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிக்கு இந்திய வீராங்கனை அனஹத் சிங் முன்னேறியுள்ளார்.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் அனஹத் சிங் 11-4, 10-12, 11-9, 11-3 என்ற புள்ளிகள் கணக்கில் எகிப்து வீராங்கனை பார்ப் சமேவை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியின் மார்ட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்காய்ச்சல் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு, டேமியன் மார்ட்டின் பிரிஸ்பேனிலுள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கோமா நிலையிலிருந்து தேறி...
சிட்னி டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் பெரிய சதம் ஒன்றை எடுத்து ஆட்டமிழந்தார். நேற்று 91 என்று இருந்த ஹெட், சதம் எடுத்து பிறகு 150 ரன்களையும் கடந்து 163 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்குப் பிறகு ஜேக்கப் பெத்தெல் பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.டபிள்யூ ஆனார்.
இன்று காலை 166/2 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, ஆனால் இங்கிலாந்து, ‘மெல்போர்ன் வெற்றியை மறந்து...
