இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி விசகாப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா. அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில்...
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான ரேஹான் அகமது 24, பென் டக்கெட் 7 ரன்களில் நடையை கட்டினர். சீனியர் பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல் ஜோடி சீராக...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும்...
தோகாவில் டபிள்யூடிடி யூத் ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது.
யு-15 மகளிர் பிரிவில் இந்தியாவின் அஹோனா ராய் தங்கப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்கோலிகா சக்ரவர்த்தி வெள்ளிப் பதக்கமும், நைஷா ரேவாஸ்கர் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர். யு-15 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஜன்னிக் சின்னர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான மேடிசன் கீஸ் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில்...
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்வோம்: நியூஸி. வீரர் மார்க் சாப்மேன்
admin - 0
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 154 ரன்கள் இலக்கை இந்திய அணி 10 ஓவர்களில் துரத்தி வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்களை விளாசி மிரட்டினார்.
முன்னதாக அவர், 14 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அபிஷேக் சர்மாவுக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னே காயம் காரணமாக விலகி உள்ளார்.
ஆடம் மில்னே கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்...
ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரண்டன் கிங் 35 பந்துகளில், 47 ரன்கள் எடுத்தார். 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு...
