லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே...
ஷார்ஜா: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள்...
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி தனது அடுத்த ஆட்டங்களில் வெனிசுலாவுடன் வரும் 10-ம் தேதியும் பொலிவியாவுடன் 15-ம் தேதியும் மோத உள்ளது.
இந்த இரு ஆட்டங்களுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37...
துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இந்திய...
ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 31 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணி...
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத்...
கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக இந்திய அணி சுமார் 230 ஓவர்களை இழந்தது. இதில் முழுமையாக இரு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டதும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது.
தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை...
மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் - லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில்...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இலங்கை வீரர் தினேஷ் சந்திமால்
admin - 0
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.
காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பதும் நிசங்கா 1 ரன்னில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், திமுத் கருணரத்னேவுடன் இணைந்து...










