ஐபிஎல் 2025 தொடரின் 70வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். மறுமுனையில் ஆடிய மேத்யூ 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப்பின் தகுதி சுற்று 1-ல் விளையாட தகுதி பெற்றது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 185 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 9 பந்துகளை மீதம் வைத்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 11-ம் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், 5 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2-வது இடமும் பிடித்த 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில் 18-வது இடத்தில்...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார். 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து,...
நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை வீழ்த்தினார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினார். இதில் கார்ல்சன் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு...
தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று (மே 27) தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான அவர், பந்தய தூரத்தை 28:38.63 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் 3-வது இந்திய வீரர் குல்வீர் சிங் ஆவார்....
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவும், ரஷ்ய வீராங்கனையான கமீலா ரகிமோவாவும் மோதினர். இதில் அரினா சபலென்கா 6-1, 6-0 என்ற...
லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி முடிவடைகின்றன. 29-ம் தேதி முதல், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இன்று நடைபெறவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று முதல் ஆட்டத்துக்கு (குவாலிபையர்-1) தகுதி பெறும். 27-ம் தேதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால், ஆர்சிபி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும். ஒருவேளை...
நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்போதும் போல தனது ஓய்வு குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே இந்த சீசனிலும் அப்படியே உயிர்ப்போடு தோனி வைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 83 ரன்களில் வென்றது சிஎஸ்கே. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த ஆட்டத்தில் அனைத்துமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கைகூடியது. இந்த சீசனில் கிடைத்துள்ள பாசிட்டிவ்களை...
அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று அந்த நாட்டின் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி...