Google search engine
மும்பை: நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி...
முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முச்சதம் விளாசியதால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை...
புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார்...
முல்டானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றில் இல்லாத விசித்திர முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜோ ரூட் 262 ரன்களை விளாசி, ஹாரி புரூக்குடன் சேர்ந்து 454 ரன்கள் கூட்டணி அமைத்து பல டெஸ்ட் சாதனைகளை முறியடித்தார். மேலும் ஒரே காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை 5வது முறையாக எடுத்து சாதித்துள்ளார் ஜோ ரூட். பாகிஸ்தானுக்கு இப்படித் தோற்பது ஒன்றும் புதிதல்ல என்பது...
ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங் கியது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள்...
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக...
அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதி சுற்றில், ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஜப்பான் அணிக்கு எதிரான மோதலில் முதலில் நடைபெற்ற...
முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149...
ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நட்சத்திர பேட்ஸ்மேனான...
சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட்போட்டியில் இந்தியா யு-19 அணிஇன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தடெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்ஸில் 492ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 80.2 ஓவர்களில்277 ரன்களுக்கு ஆட்டமிழந்துபாலோ-ஆன் ஆனது. 215 ரன்கள்பின்தங்கிய நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்துவிளையாடிய ஆஸ்திரேலியா...