மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜப்பான் 25 – 24 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜப்பான் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 2004-ம் ஆண்டும் கோப்பையை வென்றிருந்தது.
இந்த தொடரில்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து...
இந்தியா – ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
admin - 0
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற...
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
கெபர்காவில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன் (101), கைல் வெரெய்ன் (105) ஆகியோரது சதம் காரணமாக 358 ரன்கள் குவித்தது. அதேவேளையில் இலங்கை...
பிசிசிஐ சார்பில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 17-ம் முதல் 27-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஆர்.வில்மல்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஏ.பத்ரிநாத் செயல்பட உள்ளார்.
அணி விவரம்: ஆர்.விமல் குமார் (கேப்டன்), ஏ.பத்ரிநாத், ஷன்னி சாந்து, வி.எஸ்.கார்த்திக் மணிகண்டன், ஜி.அஜிதேஷ், எஸ்.ஆர்.ஆதிஷ், எஸ்.ரித்திக் ஈஸ்வரன், கே.டி.ஏ.மாதவ பிரசாத், எஸ்.லக்சய் ஜெயின், மானவ் பராக், ஜி.கோவிந்த்,...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 63.33 சராசரி புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கி உள்ளது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில்...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் முடிவடைந்த அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் விளாசிய நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்டானார்.
அப்போது சிராஜ் ஆவேசமாக, டிராவிஸ் ஹெட்டை நோக்கி திரும்பி செல்லுமாறு சைகை...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். ஆனால், 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து...
குவாஹாட்டி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தனிஷா, அஸ்வினி ஜோடி 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஹுவா ஜோவ், வாங் ஜி மெங் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: ஷாகித் அப்ரிடி
admin - 0
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்றும், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)...










