ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்: இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்
admin - 0
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் சதம் மூலம் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில்...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61, ஷெமைன் காம்ப்பெல் 46 ரன்கள் சேர்த்தனர். இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்களையும், ரேணுகா...
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் கான்ஸ்டாஸ் டி 20 பாணியில் விளையாடி 60 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
மெல்பர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு...
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறப் போவது யார் என்பதில் 2 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய...
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுமி ஆதிரை, 7 முதல் 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சிஷ்யா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் ஆதிரை, பயிற்சியாளர் விஜய் டாமினிக்கிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரிஸ்பன் போட்டியின் முடிவில்...
மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும் என...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விளையாட்டு உத்தியை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஜி. திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்....
நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
admin - 0
நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த...










