Google search engine
யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடைபெறுகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூர் 750 சூப்பர் தொடரான இதில் இந்தியாவின் சவாலை பி.வி. சிந்து, லக்சயா சென் ஆகியோர் தோளில் சுமக்க உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தென் கொரியாவின்...
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அண்மையில் இந்திய அணிக்கு எதிரான பார்டர்...
குஜராத் மாநிலம் வடோதராவில் யுடிடி 86-வது ஜூனியர் மற்றும் இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஹன்சினி, ஹரியானாவைச் சேர்ந்த சுகானா சைனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஹன்சினி 4-2 (1-11,11-9, 13-11,11-9, 10-12,11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. அந்த அணி 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி முல்தான் நகரில் தொடங்குகிறது. கடைசி மற்றும் 2-வது...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43.44 சராசரியுடன் 391 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்திருந்தார். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள்...
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் வரும் 10-ம் தேதியும், 2-வது ஆட்டம் 12-ம் தேதியும், 3-வது மற்றும் கடை ஆட்டம் 15-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 3 ஆட்டங்களும் ராஜ்கோட்டில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் வரும்...
அமெரிக்க நாட்டின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 1963 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயல்பாடு போன்றவற்றை ஈடுபட்டு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, உஸ்மான் கவாஜாவின் விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய முன்னாள் வீரர் பிஷண் சிங் பேடியின் சாதனையை சமன் செய்துள்ளார். பேடி, 1977-78-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 31 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இதனிடையே, இந்தத் தொடரில் பும்ரா இதுவரை 32 விக்கெட்களை...
லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் உலக சாதனை படைத்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் நேற்று விஜய் ஹசாரே டிராபிக்கான போட்டியில் விதர்பா, உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் விதர்பா அணிக்காக விளையாடிய கருண் நாயர், 112 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்த கருண் நாயர் மொத்தம் 542 ரன்கள் குவித்து...