இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது.
ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47...
இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹாகன் 246 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 92 ரன் கள் சேர்த்தார்.
பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 16.2 ஓவர்களை வீசி 45...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி 20 (ஐஎல்டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கை வீரர் குஷால் மெண்டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி...
‘பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது எளிய காரியம் அல்ல” – பாக். கிரிக்கெட் ரசிகர்கள் விரக்தி
admin - 0
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அந்நாட்டு மக்கள் அந்த அணி மற்றும் அதன் வீரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள். பத்திரிகையாளர்கள், மக்கள் என பலரும் தங்கள் அணியை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான்...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் கழித்தே பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய வீரர்கள் சிலரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா,...
13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.
12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்தியாவில் 4...
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது.
துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்...
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தவாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகமதாபாத்தில்...
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா - இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி...








