Google search engine
பெட்வே எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை டக்வொர்த் லீவிஸ் & ஸ்டெர்ன் விதிமுறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி. தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 141...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். இந்திய அணிக்காக விளையாடியவர். இந்நிலையில் யோக்ராஜ் சிங் நேற்று கூறியதாவது: கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2025-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று மும்பையில் ராஜீவ் சுக்லா கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டி மார்ச் 23-ம்...
எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார்? யார்?’ என பார்ப்போம். பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் 29 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர், 40 ரன்கள் சேர்த்திருந்தார். இருப்பினும் முதல் 4 டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை எனவும், தனது விக்கெட்டை...
19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் 380 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 150.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆர்.கே.ஜெயந்த் 91, ஆர்.பிரவீன் 42 ரன்கள் விளாசினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி 20 தொடரின் 2-வது ஆட்டம் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (12-ம் தேதி) காலை 11...
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா...
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆடவர் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் எதிரெதிர் பகுதியில் இடம் பெற்றுள்ளனர். இதனால் இவர்கள், இறுதிப்போட்டியிலேயே நேருக்கு நேர் சந்திக்க...
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 11 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்திய அணி ஸ்மிருதி மந்தனா தலைமையில் களமிறங்குகிறது. அயர்லாந்து அணி கேபி லூயிஸ் தலைமையில் விளையாடுகிறது. இரு அணிகளும் ஒருநாள்...