Google search engine
டெல்​லி​யில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். சேலத்​தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்​பில், ஒரு லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கிய முதல்​வர் ஸ்டா​லின், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்​தார். சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சி​யில், ஆட்​சி​யர் பிருந்​தாதேவி வரவேற்​றார். அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், ராஜேந்​திரன் முன்​னிலை வகித்​தனர். நிகழ்ச்​சி​யில்...
உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த...
மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளிகல்வித் துறை சார்ந்த மத்திய அரசின்...
முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த...
தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தஞ்​சாவூரில் வரும் 15-ம் தேதி பொது​மக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சந்​தித்​துப் பேசுகிறார். தொடர்ந்​து, கருணாநிதி சிலை​யைத் திறந்து வைக்​கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்​லூரி மைதானத்​தில் நடை​பெறும் விழா​வில் 1.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கு​கிறார். மேட்​டூர் அணை​யில் முதல்​வர் தண்​ணீர் திறந்​து​விட்​டுள்ள நிலை​யில், டெல்டா மாவட்​டங்​களில் விதை...
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், ரூ.151 கோடி மதிப்பில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய நவீன மந்தைவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம் ரூ.151 கோடி மதிப்பில் மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன...
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளளது. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில்...
திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை காலம் காலமாக பாறைக்குழிகளில் நிரப்பி வருகிறது மாநகராட்சி. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றியம் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் மாற்று இடம் கிடைக்காமல்...
“மாவட்டச் செயலாளரை மாற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும்” மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பகிரங்கமாக கொளுத்திப் போட்ட இந்த நெருப்பு இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்களான குத்தாலம் கல்யாணம், அவரது மகன் க.அன்பழகன் ஆகியோர் மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வுமான நிவேதா எம்.முருகனுக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தற்போது...
அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு...