கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குள்ளான காலமே இருப்பதால்,. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60) கடந்த ஜூன் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். வழக்கமாக ஒரு எம்எல்ஏ மறைந்தால், அது தொடர்பாக இறப்பு சான்று, சட்டப்பேரவை...
விஜய் பிறந்த நாளுக்கு அனுமதி இன்றி விதிகளை மீறி பேனர் வைத்ததாக, தவெக-வினர் மீது போலீஸார் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அவரது தொண்டர்களும், ரசிகர்களும் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக-வினர் பேனர்கள் வைத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உரிய அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். அப்போது, சில...
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது...
ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் சமுதாய நல மருத்துவமனை கட்டிடம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்
admin - 0
சென்னை ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கூடிய நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிஐடி குடியிருப்பு முதல் தெருவில், 50 ஆயிரம் பேர் பயன்பெறும் விதமாக ரூ.3.01 கோடியில் 6.25 எம்எல்டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு...
அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளுக்கான கட்டிடங்களை கட்டும் திமுக அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை.
வேலூர் மாநகரில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் நாளை...
ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார்.
அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து...
முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்
admin - 0
தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஒரு கோஷ்டி கருதியது. அறநிலையத் துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது.
இந்த மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,...
சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப். 15-ம் தேதி...
துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை: வைகோ மறுப்பு
admin - 0
துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கடவுள் பெயரால் மாநாடு நடத்தியது இல்லை. முருகன் மாநாட்டுக்குப் பின்னால், பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் உள்ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு...
மாநாட்டுக்கு காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
admin - 0
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், எல்.முருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் முருக பக்தர்கள் மாநாடு. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி பாடல்கள் பாடும்போது, முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வீட்டில் கந்த சஷ்டி பாட...










