பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சியின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து இந்திய...
மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு...
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசும்போது,; ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து...
குன்னூர் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட குன்னூர் சட்டபேரவை தொகுதியில், கோடேரி கிராமம், பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை, 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்ததில் குறைகளை கண்டறிந்தார்.
அதில், குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்டு 12, 17-ம் எண் வார்டுகள்...
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான். அதற்கு நன்றியுடன் இருக்கிறோம் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்கு போதித்தவர் பேரறிஞர் அண்ணா.
சிறந்த...
தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் தேமுதிக என்று நம் உழைப்பால் உணர்த்துவோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
21-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுதிய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்பாட்டோடு சனாதனம், சமதர்மம், சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றி...
விரைவில் என்னுடன் 3 எம்எல் ஏக்கள் வருவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஓசூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
எனது மகள் காந்திமதி இன்று முதல்முறையாக பேசினார். அவர் நன்றாகப் பேசியுள்ளார். தற்போது என்னுடன் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 எம்எல்ஏக்களும் என்னுடன் வருவார்கள்” என்றார்.
முன்னதாக ராமதாஸ் மகள் காந்திமதி பரசுராமன் பேசியதாவது: எனது...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் படத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாளராக இருந்தார்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்மாள் கடந்த 8-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் மதுரை திருமங்கலம் அருகில் உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப...
விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது, நாங்கள் எப்படி அந்த கூட்டணியில் இருக்க முடியும்? முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள்,...
மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்
admin - 0
பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (50). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த குறுஞ்செய்தியும் வராததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதியுள்ளார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25-ம் தேதி நடந்த...










