‘அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடாதுல்ல…’ – நேருவுடன் நேருக்கு நேராய் மோதும் திருச்சி திமுக எம்எல்ஏக்கள்!
admin - 0
திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.
நேருவின்...
சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்: ஜூலை 17-க்குள் சமர்ப்பிக்கலாம்
admin - 0
சென்னை மாநகராட்சி மன்றத் துக்கான 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து சட்டமாக்கியுள்ளார்.
ஆண், பெண் தலா ஒருவர் அதன்படி சென்னை மாநகராட்சி...
விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி
admin - 0
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக, திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இன்று (1-ம் தேதி) சென்னையில் 7 இடங்களில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
அதன்படி, தண்டையார் பேட்டை மணிக்கூண்டு, பெரம்பூர் மூகாம்பிகை திரையரங்கம், அம்பத்தூர் எஸ்டேட், அயனாவரம், சிவானந்தா சாலை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் நாகாத்தம்மன் கோயில் உள்ளிட்ட 7...
சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையங்களை, டிட்கோ மூலமாக அமைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 37 வகையான திட்ட பணிகளை...
வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி, சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அன்புமணி குறித்து தவறாகப் பேசி வருவது கண்டனத்துக்குரியது.
அன்புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்ளது? பாமக உட்கட்சி விவகாரம் சரியாகி விடக்கூடாது என்பதற்காக அருள் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அன்புமணி குறித்து இனியும் தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் நோக்கில் எம்எல்ஏ...
அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 171 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிதியுதவி அளிக்கும்...
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
admin - 0
`ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக்...
போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு...
தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது. ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 13 வீரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக...










