அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1,823 இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 268 இடங்கள் என 2,091 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன. அதுபோல் 1,360 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.
இந்நிலையில் 2025- 26...
‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை பேசினார். கட்சியினர் அளித்த வரவேற்பைப் தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,275 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,800 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 11,275 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் நேற்று காலை முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 2,000 கனஅடியும் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீர் மின்...
மதுரையில் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் சகோதரியும், மருத்துவருமான விஜயலட்சுமி மதுரையில் மருத்துவமனை நடத்தினார். இவரது கணவர் துரைராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுணராக உள்ளார்.
உடல்நலக்குறைவு: வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டில் வசித்து வந்த விஜயலட்சுமி உடல் நலக்குறைவால்...
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்
admin - 0
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் சிறுநீரகங்கள் பழுதானதால், மாற்று சிறுநீரகங்கள் பொருத்த அனுமதி கோரி பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குழு இதுவரை அனுமதி...
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்
admin - 0
இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிபகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம்...
செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்
admin - 0
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம்.
ஆர்வமுள்ள தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி...
என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து
admin - 0
தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும்,...
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்....
தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி போக வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே, முதல்வர் குடும்பத்துடன் வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அங்கிருந்து எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார் என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் பெரியார் படத்தை திறந்துவைத்தேன்...










