Google search engine
சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு செல்​லும் வழித்​தடத்​தில் நேற்று காலை 6 மணிக்கு தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. அதாவது ஆலந்​தூர் - விமான நிலை​யம் இடையே தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதையடுத்து தொழில்​நுட்​பகோளாறை சரிசெய்​யும் பணி​யில் பொறி​யாளர்​கள் ஈடு​பட்​டனர். சென்னை சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு நேரடி​யாக மெட்ரோ ரயில் சேவை இல்​லாத​தால் பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்​தனர். தற்​காலிக​மாக சேவை ரத்​தான​தால் பயணி​கள் ஆலந்​தூரில்...
பொது இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டி​னால் வாக​னம் பறி​முதல் செய்​யப்​படு​வதுடன், டன்​னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும் என மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக மண்டல உதவி ஆணை​யர்​களுக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னையின் முக்​கிய சாலைகள், தெருக்​கள், நடை​பாதைகள், நீர்​நிலைகள், திறந்​த வெளி​கள் மற்​றும் காலி இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வது மாநக​ராட்சி கவனத்​துக்கு வந்​துள்​ளது. இத்​தகைய செயல்​களால் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படு​வதுடன் காற்று...
நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, பாரிமுனையில் 500-க்​கும் மேற்​பட்ட ஆக்​கிரமிப்பு கடைகள் அகற்​றப்​பட்​டன. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வியா​பாரி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை பூக்​கடை, பாரிமுனை என்​எஸ்சி போஸ் சாலை நடை​பாதை​யில் 500-க்​கும் மேற்​பட்ட கடைகள் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்​தன. இதனால் அந்த பகு​தி​யில் அரசு பேருந்​துகள், கார் உள்பட அனைத்து வித​மான வாக​னங்​களும் செல்​வ​தில் சிரமம் இருந்​தது. இதனால், எப்​போதும் வாகன நெரிசல் ஏற்​பட்டு போக்​கு​வரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, ஆக்​கிரமிப்பு...
புத்​தாண்டை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து 570 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஆங்​கில புத்​தாண்டை முன்​னிட்டு டிச.30 மற்​றும் 31 மற்​றும் ஜன.1-ம் தேதி​களில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் இருந்​தும் தமிழகம் முழு​வதும் மக்​கள் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி...
சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20...
பணி​யின்​போது ஓட்டுநர்கள் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என மாநகர் போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் கடந்த சில நாட்​களாக அதிக அளவில் விபத்​துக்​கள் மற்​றும் உயி​ரிழப்பு விபத்​துகள் ஏற்​பட்டு வரு​கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. சில ஓட்டுநர்கள் செல்​போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்​கு​வது பொது​மக்​களின் புகார் மற்​றும் பேருந்​தின் சிசிடிவி கேமரா மூலம் கண்​டறியப்​படு​கிறது. இவ்​வாறு ஓட்டுநர்கள்...
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி​சாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி, ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். அதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​தணி மற்​றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகு​தி​களில் நேற்று சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். இதில், திருத்​தணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், வீரகநல்​லூரில் பழனி​சாமி பேசி​ய​தாவது: நான் எழுச்சி...
தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில், இந்​திய, சர்​வ​தேச இளை​யோர் பாய்​மரப் படகுப்​போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 மற்​றும் டிரை​யத்​லான் சென்னை - 2026 போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதற்கான முன்​னேற்​பாட்டு பணி​கள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று ஆலோசனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: சர்​வ​தேச இளை​யோர் பாய்மர படகுப் போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 போட்​டியையொட்​டி, சென்​னை​யில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி...
குறைந்​த​பட்ச செயல் திட்​டத்தை உரு​வாக்கி அதி​முக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்​கும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக, பாஜக கூட்டணி குறைந்​த​பட்ச செயல் திட்​டத்தை உரு​வாக்கி ஆட்சி அமைக்​கும். எங்​களை யாரும் மிரட்ட முடி​யாது என்று டிடி​வி. ​தினகரன் கூறுகிறார். நாங்​கள் யாரை​யும் மிரட்​டி, கூட்டணி​யில் சேர்க்​க​வில்​லை. விஜய்யை மட்​டுமல்ல, எந்த தனி நபரை​யும் விமர்​சனம்...
தவெக கூட்ட நெரிசல் விசா​ரணை தொடர்​பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெற உள்ள விசா​ரணைக்கு ஆஜராக கரூர் ஆட்​சி​யருக்​கும் சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. கரூரில் நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பொதுச் செய​லா​ளர்...