“பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சபதம் போடுகிறார். “கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை” என்கிறார் புதிதாய் புறப்பட்டிருக்கும் செங்கோட்டையன். “அதிமுக-வை ஒருங்கிணைப்பதே எனது வேலை” என தன்பங்கிற்கு சபதம் செய்திருக்கிறார் ஓபிஎஸ். இவர்களுக்கு மத்தியில், “அதிமுக-வை மீண்டும் ஒன்றுபடுத்துவேன்” என்கிறார் சசிகலா.
இவர்களின் பேச்சு அத்தனையுமே அதிமுக என்ற கட்சியை நோக்கியதாக இல்லாமல் நேரடியாகவும்...
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவர், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்துக்கான சவுதி அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியாவை ஜெட்டாவில் நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது அடுத்தாண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது ஹஜ் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து...
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிய வைத்தால் அதை சரிசெய்யவே அதிமுக வழக்கில் இணைந்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல்...
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்...
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் நிர்வாகி – பாஜகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை
admin - 0
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, அதற்கான பணியில் இருந்து விடுவித்து ஆட்சியர் விடுவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக(எஸ்ஐஆர்), திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிகண்டம் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அப்பகுதியைச் சேர்ந்த...
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. அதனால பம்பரமா சுழன்று வேலை பார்க்கணும்’னு தலைமை உத்தரவு போட்டிருக்காம்.
வழக்கமான வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பு மாதிரி எஸ்ஐஆர் இல்ல.. ரொம்ப கவனமா, கண்கொத்தி பாம்பா இருக்கணும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். ஓரணியில தமிழ்நாடு தொடங்கி,...
‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ – உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு
admin - 0
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர். இதற்காக ஊர்கள் தோறும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகினறன.அந்த வகையில் கள்ளக்குறிச்சியிலும் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்துடன் இதற்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு உடன்பிறப்புகளுக்கு எப்படி தேர்தல் பணியாற்ற...
“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” – பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நேர்காணல்
admin - 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அனுபவமும் கொண்டவர். தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை, கட்சிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கார்த்தியாயினி. அவரது பேட்டியிலிருந்து...
அதிமுகவில்...
“குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்ய பெரியாரும் அண்ணாவும் சொன்னார்களா?” – திமுகவை கேட்கிறார் தவெக-வின் அருண்ராஜ்
admin - 0
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக, இந்திய வருவாய் துறையில் தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியவர். கடந்த மே மாதம் விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், ஜூன் மாதம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்ஐஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினால் காப்புத்தொகை கட்ட வேண்டும் என்பது...










