இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் மற்றும் கோயம்பேடு - ஆவடி வரை நீட்டிப்பு ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்...
ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல்30-ம் தேதி ராணுவத்தின் தலைமைதளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் மே 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதியஅரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார். இதை கருத்தில் கொண்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு...
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி வரும்...
கோயில்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்கும் வகையில் ஆய்வு மையம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கி உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் காகிதப் பயன்பாடு வருவதற்குமுன் பனை ஓலைகளையே பதிவுத்தாள்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளில் கோயில்கள் பற்றிய விவரங்கள், வரலாறு, மன்னர்கள்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு, முகத் தாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு மற்றும் பிற முகதாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக வழங்க சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும்...
 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளால் என்னை செறிவூட்டியுள்ளனர் என ஓய்வுபெறும் நாளில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்த்தி பேசும்போது, ‘‘பல ராஜ்ஜியங்களை வெற்றி...
பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் எல்லா நிலையிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், செய்தி தொடர்பாளருமான சமந்தா ஜாக்சன் வலியுறுத்தினார். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், தென்னிந்திய எக்ஸ்சேஞ்ச் விசிட்டர்ஸ் அலும்னி அசோசியேஷன், சுரானா அண்ட் சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், ‘அனைவரையும் உள்ளடக்கிய பத்திரிகை பணி சூழலை உருவாக்குவதில் செய்தி ஆசிரியரின் பங்கு’ என்ற தலைப்பில், சென்னையில்...
நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்.டி.ஆர்.எஃப் அறக்கட்டளை - எம்பெட்யூஆர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நீரிழிவு நோய் பாதிப்பால் உடலில் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிய மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஆராய்ச்சியை சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் அதிகரித்துவரும் நீரிழிவு நோயின் பரவலை தடுக்கும் விதமாக சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், எம்பெட்யூஆர் நிறுவனமும்...