பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. சில ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்குவது பொதுமக்களின் புகார் மற்றும் பேருந்தின் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு ஓட்டுநர்கள்...
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில், வீரகநல்லூரில் பழனிசாமி பேசியதாவது: நான் எழுச்சி...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 மற்றும் டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி சாம்பியன்ஷிப் 2026 போட்டியையொட்டி, சென்னையில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி...
குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி ஆட்சி அமைக்கும். எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று டிடிவி.
தினகரன் கூறுகிறார். நாங்கள் யாரையும் மிரட்டி, கூட்டணியில் சேர்க்கவில்லை. விஜய்யை மட்டுமல்ல, எந்த தனி நபரையும் விமர்சனம்...
தவெக கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெற உள்ள விசாரணைக்கு ஆஜராக கரூர் ஆட்சியருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர்...
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர், குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவு முறை, வழிபாட்டு முறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.
தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். இங்கு ‘மொற்பர்த்’ என்ற புத்தாண்டுப் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர்...
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே பாக் நீரிணைக் கடற்பகுதியில் மண்டபம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை...
தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்தூரில் 28 விரைவு ரயில்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நிறுத்தம், பிப்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள்.
அவர்களின் வசதிக்காக, மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள், தற்காலிகமாக அந்த நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லோக்மானிய திலக் - காரைக்கால், எழும்பூர் - மதுரை...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: திண்டுக்கல் நிதி நிறுவன உரிமையாளரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்தவரிடம் கேரள போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள் 2019-ல் கழற்றப்பட்டு, செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு செப்பனிடும் பணிக்காக நகைகளை ஒப்படைத்த போது எடை 42.8 கிலோவாக இருந்தது. செப்பனிட்ட பிறகு சென்னையை சேர்ந்த...
புதுச்சேரியில் போலி மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதுகுறித்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரிக்கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த...
