செப்.11, 14, 15-ம் தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்: சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி
admin - 0
சென்னையில், விநாயகர் சிலைகளை செப். 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று 4 இடங்களில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை வழிபட்டு வணங்குவார்கள்.
பின்னர், ஒருவார காலம் சிறப்பு...
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு...
உணவு பாதுகாப்பு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
admin - 0
மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 391 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே...
நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தர 5 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழக அரசு ஆணை
admin - 0
தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை:
‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் பாலங்கள்சிறப்பு அலகு உருவாக்கப்படும்’என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்வது குறித்தும்5 ஆண்டுகளுக்கு மேல் காலியாகஉள்ள பணியிடங்களின் தேவைகுறித்து பரிசீலிக்கவும், அமைச்சரின் அறிவிப்புகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்து...
நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்பு நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு...
தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை குறைவாக நடைபெற்றதாக டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 86 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 46 கண்காணிப்பாளர்கள் மீது...
சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ளபி.எஸ். கல்வி சங்கத்தின் 50-ம்ஆண்டு பொன்விழா கொண்டாட் டம், வரும் 31-ம் தேதி (சனிக் கிழமை) தொடங்குகிறது.
பென்னாத்தூர் சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்ட பி.எஸ். கல்வி அறக்கட்டளையின்கீழ் 1974-ல் உருவானது பி.எஸ். கல்விசங்கம். இந்த சங்கத்தின் சார்பில்நடத்தப்படும் பல்வேறு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த கல்வி சங்கத்தின் பொன் விழா ஆண்டு தொடக்கநிகழ்ச்சி, 31-ம் தேதி (சனி) மாலை மயிலாப்பூரில்...
கல்வியில் சமய பாடங்களை புகுத்தும் முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானத்தை செயல்படுத்த கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
admin - 0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து...
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசுஅழுத்தம் கொடுப்பதால், 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டிய நிலைஏற்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய பங்கீட்டுத் தொகை ரூ.573...
ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு; மீண்டும் வாதங்களை முன்வைக்க அமலாக்க துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
admin - 0
ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் பெற்று அதை முறைகேடாகப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்ததாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த2011-ம் ஆண்டு ஊழல் வழக்குப்பதிவு...










