Google search engine
வீட்டு மனை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டு மனைகளை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி,...
சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி...
அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்பதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்துக்கும், தமிழக அரசுக்கும்...
செங்​கல்​பட்டு அருகே பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயி​லில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அறநிலையத் துறைக்கு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் தாக்கல் செய்திருந்த மனுவில், “செங்​கை மாவட்டம் பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயில் அறநிலையத் துறை​யின் கட்டுப்​பாட்​டில் உள்ளது. வடகலை வைணவ சம்பிர​தாயப்படி இந்த...
தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும், ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலும், விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில், சிறப்பாக கட்சி பணி செய்தோருக்கு...
போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின்...
லாரி​யில் ரகசிய அறை அமைத்து, ஆந்திரா​வில் இருந்து பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி​யில் தனிப்படை போலீ​ஸார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்​டிருந்​தனர். அப்போது, பேராவூரணி​யில் இருந்து முடச்​சிக்​காடு பகுதியை நோக்​கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை​யிட்​ட​தில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்​திருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து, லாரியை பின்​தொடர்ந்து...
உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது: மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும்...
கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக​வின் தேர்தல் அறிக்கை​யில் “பணி​யில் இருந்த​போது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்​கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்​களின் குடும்பத்​தா​ருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். ஆனால்,...
அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்​துள்ளது. ஆண்டு​தோறும், தமிழக அரசின் சார்​பில் சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமைகள் அரசு விடு​முறை நாட்கள் தவிர, இதர பொது விடு​முறை தினங்கள் அறிவிக்​கப்​படும். அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, செலாவணி முறிச்​சட்​டத்​தின் அடிப்​படை​யில், தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து...