Google search engine
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சங்கர் ஜிவால், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987...
சென்னை: பெருமழை காரணமாக அக் 16,17 ஆகிய இரு தினங்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவுவழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்பது குறித்து விளக்கமளிக்க வழக்கு தொடர்ந்துள்ள அதிமுக நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால்,...
ரயிலில் படுக்கை பலகை கொக்கி அறுந்து விழுந்ததில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன். மதுரை: நாகர்கோவில்-கோவை ரயிலில் இரும்பு கொக்கிகள் அறுந்ததால் படுக்கை பலகை விழுந்து, சிறுவன்பலத்த காயமடைந்தார். கோவை அண்ணா ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மேத்யூ மனைவி புவிதா(29). அங்குள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார். இரு தினங்களுக்கு முன்புசொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து விட்டு, பின்னர் தனது 4 வயது மகன் ஜாய்சன் தாமஸுடன் கோவை செல்வதற்காக...
சென்னை: மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை, மதிய உணவு உள்ளிட்டவற்றை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10 செமீ மழையிலேயே தெருக்கள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேம்பாலத்தில் கார்களை நிறுத்த அவசியமில்லாத வகையில் மேம்படுத்த வேண்டியவை குறித்து திட்டமிடப்படவில்லை....
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதிமட்டுமே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் 3-ல் ஒரு பங்குக்கும் இது குறைவானது. அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 1.39 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதேபோல,...
மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி முதலீடு வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி,நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். இந்நிலையில், கைது...
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில்...
சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட...
சென்னை: மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க என்சிஎம்சி (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) எனப்படும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக எஸ்பிஐ வங்கி உதவியுடன்...