தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செமீ, தஞ்சாவூர் ஒரத்தநாடில்...
தமிழகம் முன்னேற திராவிட இயக்கம்தான் காரணம்: அமைச்சர் பொன்முடியின் நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் கருத்து
admin - 0
மற்ற மாநிலங்களை விட தமிழகம் இன்று முன்னேறிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம். ஆரிய ஆதிக்கவாதிகளுக்கு திராவிடம் என்றாலே அலர்ஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற நூலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட தமிழக மக்களுளின்...
உதயநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் சர்ச்சை: பாஜக, பாமக தலைவர்கள் விமர்சனம்
admin - 0
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் புத்தாய்வு திட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அங்கு இருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, ‘திகழ்பரதக்...
வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகனும், அவரது பெண் தோழியான மயிலாப்பூர் தனலட்சுமியும் சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் காரை நிறுத்தி வைத்திருந்தனர். அந்த காரை எடுக்கும்படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் கூறியதால், இருவரும் போலீஸாரை ஆபாசமாக திட்டி அத்துமீறி நடந்து கொண்டனர்.
இதையடுத்து, மயிலாப்பூர் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே, தனலட்சுமி தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சந்திரமோகனும்...
மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ஒதுக்கப்படாத வீடுகளில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு 554 குடும்பங்களிடம் நல்ல நிலையில் ஒப்படைப்பு
admin - 0
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மூலகொத்தளம் திட்டப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அனைத்து மேம்பாட்டு வசதிகளுடன் கூடிய 1035 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2021 -ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது. தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு , விடுபட்ட சில சிறு பணிகளும் முடிக்கப்பட்டு 2023 -ம் ஆண்டு குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டது.
இத்திட்டப்பகுதி 11...
பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
admin - 0
பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வியாசர்பாடி பணிமனையைச் சேர்ந்த பேருந்து, நேற்று முன்தினம் இரவு மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில், ஜெ.ஜெகன் குமார் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.
அப்போது, பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறின்...
நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா வெளியிட்டுள்ள அரசாணை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் கடந்த ஜுன் மாதம் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், தற்போது...
திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். ஆசிரியர்கள்...
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓபிஎஸ்
admin - 0
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக்...
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலை வீரர்கள் மருது பாண்டியர்களின் 223-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கிண்டி எம்ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் உருவப் படத்துக்கும்...










