Google search engine
தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச...
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் கீழ்க்கட்டளைக்கு அருகே உள்ள பிருந்தாவன் நகர், பாலாஜி அவென்யூ, கேஜிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் தாழ்வானதாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்நிலை உள்ளது. இதுதவிர மூவரசன்பேட்டை ஏரி நிரம்பிவிட்டால் அதன் உபரிநீரும் இந்த தெருக்களில் புகுந்துவிடுவதால் பருவமழையின்போது இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். எனவே, மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டுமென...
சென்னை மாநகரில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்கு வந்து செல்கின்றனர். மாநகரமக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதிய கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. மாநகரில் தற்போதைய நிலவரப்படி 550-க்கும் மேற்பட்ட இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு...
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சரியான திட்டங்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீர் ஆதாரமாக 15-க்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்துள்ளன....
ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்...
கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) க/ப.சக்திவேல் என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ.1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்...
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 68,704 பேர் அதிகமாக இருக்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளருமான (வருவாய்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள்...
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.31.95 லட்சத்துக்கான காசோலைகள், ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனாவில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 4-வது உலக ஜூனியர் சாப்ட்...