Google search engine
காவிரியில் தமிழகத்துக்கான பங்கினை மாதம்தோறும் வழங்க வேண்டும். காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர்...
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9...
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்....
இரவு வாகன சோதனையின்போது தங்களை தாக்கி விட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, பரங்கிமலை போக்குவரத்து காவல் சிறப்பு...
தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்தவர் கே.மலைச்சாமி. இவர் சென்னை அண்ணாநகரில், எண்.89, ஏசி பிளாக், 2-வது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார்....
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்பட வில்லை என விவசாயிகள்...
சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு புரளியை கிளப்பும் வகையில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு மர்ம நபர்கள் இ-மெயில்கள் மூலம் இவ்வாறு மிரட்டி வருகின்றனர். அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல்...
சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி) அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ...
ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யா லயா திட்டத்தின்கீழ் தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக குழுவினர் மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சந்நிதி தெருவில்  அஹோபில மடத்தின் ஆதர்ஷ் சம்ஸ்கிருதகல்லூரி இயங்கி வருகிறது.  மாலோலன் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் சிரோமணி (எம்ஏ), மத்யமாசிரோமணி (பிஏ), பிராக் சிரோமணி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யாலயா திட்டத்தின்கீழ்...
‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) பயன்பாடு வெளிப்படை, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நேற்று தொடங்கியது. நாளை (நவ.8) வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு -...