Google search engine
திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதியும் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியும் காரணம் தெரியவில்லை. இதையடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், பெற்றோருடன் வருவாய் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும்...
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர...
இண்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்சிங் ஷோ என்று அறியப்படும் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் 12-வது பதிப்பு இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (இஇபிசி) தலைவர் அருண் கரோடியா கூறியதாவது: சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நவம்பர் 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில்...
பதிவுத்துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திர பதிவுக்காக சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம்,...
பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 23-ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. வைஜெயந்திமாலா பாலி, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்தியப் பிரதேசகல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர்,...
தமிழகத்தில் தினசரி மின்தேவை வரும் 2026-27ம் ஆண்டு 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. புதிய மின்இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகர்வு அதிகரிக்கிறது. கோடைக் காலத்தில் வீடு, அலுவலகங்களில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மின்தேவை உச்ச...
மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக சுற்றுலா துறை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா என்ற பிரத்யேக பூங்காவை அமைக்க இருக்கிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் இந்த பூங்காவில் சோலை...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இந்தியவானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது...
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அறிவித்தது. சத்யபிரத சாஹூ, கால்நடை பராமரிப்பு , மீன்வளம், பால்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக தலைமை...
சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், முதியவர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஹெல்தி ஏஜிங் கிளினிக் மற்றும் மோகன்ஸ் ஆன் வீல்ஸ்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் தலைவர் மருத்துவர் வி.மோகன், நிர்வாக இயக்குநர் ம்ருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, ஆலோசகர் மருத்துவர் எஸ்.உத்ரா ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் உலக...