உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், 5,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 வாரங்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் உள்ளது சோரா கிராமம். இங்கு 5,000 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு 250 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிலர் இந்த டிரான்ஸ்பார்மரை திருடி, அதன் பாகங்களை எடைக்கு போட, தனித்தனியாக பிரித்து அருகில்...
அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெரும் தொழில்களைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்துப், புதிய தொழிற்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.
அதேநேரத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக அளவில் தொடங்க ஊக்கமளிப்பதன் வாயிலாக, சாதாரண மக்களும் அதிக...
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால்...
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதி
admin - 0
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு நீதி கேட்டு, அண்ணா பல்கலை. முன்பாக அதிமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதேபோல், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மதுரவாயலில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரும், தேமுதிகவினர்...
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போகிப் பண்டிகையையொட்டி பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றை தனியாக சேகரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு...
சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசியதாவது: ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது.
ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள்....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்
admin - 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல்...
வெளிமாநில அதிகாரிகளை கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது திமுகவினர் ஜனநாயகத்தை புதைகுழியில் புதைத்தனர். அப்படி இல்லாமல் இந்த முறை நியாயமாக அரசமைப்புச் சட்டப்படி தேர்தலை நடத்துவார்கள் என நம்புகிறோம். கூட்டணித் தலைவர்களிடம் பேசி இடைத்தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை தொடர்பாக...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில் யார் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே தெரிவித்துள்ளார்.
பெரியாரின் குடும்பம் என்ற வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினரை, முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வாஞ்சையுடன் அணுகுகிறார். திருமகன் ஈவெரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர் ஆக்கப்பட்ட...










