Google search engine
ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று ஹெச்எம்பி வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: ஹெச்எம்பி வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று...
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் சகோதரர் இல.கோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். பாஜக மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் துலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அவரது அண்ணன் இல.கோபாலன் (82) வயது மூப்புமற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு மனைவி சந்திரா கோபாலன் மற்றும் மகள் உள்ளனர். இல.கோபாலன்...
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை காவல் ஆணையர் அருண் பணியிடை நீக்கம் செய்துள்ளார். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர் கேன் விற்பனை (சப்ளை) செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில்...
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மாநில ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பங்கேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற கிராம கமிட்டிகள்...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு கவனம் எடுத்து அரசு செயல்படுவதை பற்றி குறிப்பிடாமல், சம்பந்தமின்றி பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். இந்த அரசு...
மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடம் அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் மோகன்,...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும்...
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, ஆளுநருக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக அறிவித்து ஒரே நாளில் நடைபெறும் ஒரு நாடகப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியை வழங்கியிருப்பது எப்படி? பாமக தலைவர் அன்புமணி: அண்ணா...
முன்​னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடி​யாது என உயர் நீதி​மன்றம் தெரி​வித்​துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறை​களில் வேலை வாங்​கித் தருவ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடுபட்​டதாக அதிமுக முன்​னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முருகன் நேற்று முன்​தினம் உத்தர​விட்​டிருந்​தார். இந்நிலை​யில் இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி...
அ​திமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யின் உறவினர் நிறு​வனம் உட்பட தமிழகம் முழு​வதும் 26 இடங்​களில் வருமான வரி சோதனை நடைபெற்​றது. ஈரோட்டை தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு பூந்​துறை சாலை​யில் உள்ள செட்​டிபாளையம் என்ற இடத்​தில் ராமலிங்கம் என்பவருக்​குச் சொந்​தமான கட்டுமான நிறு​வனம் உள்ளது. இந்த நிறு​வனம் சார்​பில் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரி​யம்,...