பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.2,028 கோடி செலவிடப்பட்டது. வெள்ள நிவாரணமாக...
காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
admin - 0
தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), பிரபாகரன் (பெரம்பலூர்), பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி (கீ்ழ் பெண்ணாத்தூர்), சிவகுமார் (மயிலம்) ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகின்றன. பூந்தமல்லியை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி இயங்குவதால், புதிய...
பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து விசாரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
admin - 0
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த டிச.4-ம் தேதி...
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை மத்திய கல்வித் துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானம், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ள...
விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் புஸ்ஸி ஆனந்த்: ஆடியோ கசிந்ததால் தவெகவில் சலசலப்பு
admin - 0
நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் வலதுகரமாக இருந்து வரும் தவெகவின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்...
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவமுடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக...
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக ‘தகவல் தொழில்நுட்ப வெளியும்’ ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த...
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
admin - 0
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிமுதல் ஊதிய உயர்வு வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனை பிரிவு ஊழியர்கள், பல்வேறு...
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம்: சிஐடியு மாநில தலைவர் எச்சரிக்கை
admin - 0
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணியில் இருப்போரின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் சாலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம்...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் 82 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில்...










