Google search engine
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக...
தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்...
நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு​விடுத்து 40 கட்சிகளின் தலைவர்​களுக்கு முதல்வர் ஸ்டா​லின் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். 2025-26-ம் நிதி​யாண்​டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்​பேர​வை​யில் தாக்கல் செய்​யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாத​மும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்​பேரவை...
பரந்​தூர் வட்டார விவசா​யிகள் வாழ்​வாதார பாது​காப்​புக் குழு மற்றும் தமிழ்​நாடு விவசா​யிகள் சங்கம் சார்​பில் காஞ்​சிபுரத்​தில் பரந்​தூர் வட்டார விவசா​யிகள் நிலவுரிமை பாது​காப்பு மாநாடு நேற்று முன்​தினம் நடைபெற்​றது. இந்த மாநாட்​டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்​முகம் பேசி​யது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்​குறு​திப்படி பரந்​தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்​படுத்​தும் விவகாரத்​தில் விவசா​யிகளின் கருத்துகளை கேட்​க​வில்லை. பரந்​தூர் விமான நிலையம் அமைக்க...
‘சென்னை​யில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரி​யில் போட்​டி​யிடலாம், சென்னை​யில் வசித்த நான் மயிலாடு​துறை​யில் போட்​டி​யிடக் கூடா​தா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடு​துறை காங்​கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கும்​பகோணத்​தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்​டத்​தில் அன்புமணி ராமதாஸ் பேசும்​போது, ‘இந்த தொகு​திக்கு சம்பந்​தமில்லாத சென்னையி​லிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரி​யாமல் வாக்​களித்து அவரை வெற்றி பெறச் செய்​தீர்கள்'...
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார். தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக...
ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலை - கோபாலபுரம் சந்திப்பில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்ற கார் ஒன்று அதே பகுதியில் `யு' வளைவில் நேற்று காலை திரும்பியபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஆட்டோ சாலையில்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப்...
ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது என அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்று, ஜெயலலிதா...
வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்​தில் செயல்​படுத்து​வ​தால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிப்​பதாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. நில உரிமை​யும், பழங்​குடி மக்களின் இனச்​சான்று, இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பும் கோரி சென்னை​யில் நேற்று தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது. ஆர்ப்​பாட்​டத்தை தொடங்கி வைத்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில செயலாளர் பி.சண்​முகம் பேசி​ய​தாவது: ஆதிதிரா​விடர், பழங்​குடி​யினர் நல...