Google search engine
தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2,...
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவை...
தடை செய்​யப்​பட்ட பயங்​கரவாத அமைப்​புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்​குடி உட்பட தமிழகத்​தில் 6 இடங்​களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்​தினர். இதில் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன. இந்தியா​வில் ஹிஸ்ப்​-உத்​-தஹ்ரிர் என்ற பயங்​கரவாத அமைப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்​புக்கு ஆதரவாக சிலர் செயல்​பட்டு வருவ​தாக​வும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்​கத்​தில் சேர்க்க முயற்சி...
தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருபவர் கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜியாக...
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ மற்றும் வருமான வரித்துறை ஊழியர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழி்ப்பறி செய்ததாக திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ ராஜாசிங், வருமான வரித்துறை ஊழியர்கள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் கைது...
கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மார்ச் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கழிவுகளை கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே...
போரூர் சுங்கச்சாவடி முன்பாக போக்கு​வரத்​துக்கு இடையூறு ஏற்படுத்​தி​யதாக 100-க்கும் மேற்​பட்​ட​ தவெக​வினர் மீது மதுர வாயல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். தவெக கட்சி​யின் சென்னை கிழக்கு மாவட்ட செயலா​ளராக பாலமுருகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு போரூர் சுங்​கச்​சாவடி முன்பு நேற்று முன்​தினம் வரவேற்பு அளித்து தவெக கட்சி​யினர் கொண்​டாட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது கிரேன் மூலம் 15 அடி பிரம்​மாண்ட மாலையை அணிவித்​தும் ஜேசிபி மூலம் மலர்​களைத் தூவி​யும் வரவேற்​றனர். இந்நிகழ்ச்​சி​யில்,...
நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளரான சரத்குமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருவீதி அம்மன் கோயில்...
ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். சிறுவனுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததால், அது தான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் 9 வயது மகன் மைதீஸ்வரன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கால்களில் உணர்விழப்பு...
பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை அகவிலைப்படி வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக...