சென்னை: ஏமாற்றி காரை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டதால் ஆத்திரம்: வியாபாரியை கடத்தி தாக்கிய இளைஞர் கைது
admin - 0
முகப்பேர், ரெட்டிப்பாளையத்தில் வசித்து வருபவர் சரவணன் (54). பழைய கார்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த 21-ம் தேதி மதியம் இவர், தனது மகனுடன் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது, அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று, சரவணன் மற்றும் அவரது மகனை சரமாரியாக தாக்கியது. பின்னர், சரவணனை மட்டும் காரில் கடத்திச் சென்றது.
அவரை முகப்பேர் கிழக்கில், கோல்டன் ஜார்ஜ் நகர் அருகே வீடு...
குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற இபிஎஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
admin - 0
ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற பழனிசாமி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவத்தை இரட்டை படுகொலை என்று...
தேர்தல் பறக்கும் படை சோதனையில் டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்: படப்பிடிப்புக்கு சென்றவை என தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதி
admin - 0
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னை, தி.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அசோக்நகர் 2-வது அவென்யூவில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக...
தயாரிப்பாளரிடம் ரூ.4.25 கோடி வாங்கிய விவகாரம்: கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
admin - 0
படத் தயாரிப்பாளரிடம் முன்பணமாக வாங்கிய ரூ.4.25 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் படத்தயாரிப்பாளரான எல்ரெட் குமார், கடந்த 2013-ல் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2008-ல் ஒப்பந்தம்
அதில், ‘நடிகர்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு படைகள் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.152 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10...
சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது
admin - 0
சாம்சங் ஆலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவரும் நிலையில், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில்...
ஓய்வுபெற்ற நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவருமான தமிழ்வாணன் (71) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் நேற்று காலமானார்.
சட்டத் துறையில் பயின்று வழக்கறிஞராக தனது பணியை தொடங்கியவர், 2005 முதல் 2016 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பல முக்கிய வழக்குகளில் சிறப்பான...
ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஓடும் ரயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இத்தகைய சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச் சொத்துகளுக்கு சேதத்தையும், ரயில் சேவையில்...
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 25 அல்லது 26-ம் தேதிகளில் பெரம்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோலார்பேட்டை - தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், 13 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, அரக்கோணம் - சேலத்துக்கு நாளை ( 24-ம் தேதி) அதிகாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சேலம் - அரக்கோணத்துக்கு அதேநாளில் பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், கோவை - சென்னை சென்ட்ரலுக்கு அன்றைய தினம் காலை 6.20...










