சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இமெயில் வந்தது.
வெளிநாட்டிலிருந்து வந்த இந்த மிரட்டல் குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகம் மற்றும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,...
தென்மாவட்டத்தில் இருந்து வரும் அரசுப் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக துறை சார்பில் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
அவற்றில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாதவரம் செல்லும் பேருந்துகள் நீங்கலாக மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை...
வைகுண்டர் விரும்பிய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்: 193-வது பிறந்தநாள் விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் உறுதி
admin - 0
வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வைகுண்டர் விரும்பிய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள். “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என்...
நடப்பாண்டில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் வகையில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர்...
முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: பாஜக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக பங்கேற்பு
admin - 0
மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்து அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில்,...
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4...
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபேன் இந்தியா நிறுவனத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் 54-வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அமைச்சர் உரையாற்றும் போது, ``தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவது முக்கியம்.
தொழிலாளர்கள் ஆரோக்கியம், நலனை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். தொழிலாளர்களின் உயிரைப்...
சென்னை | காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மீது பெட்ரோல் குண்டு வீசிய மகன் மனைவியுடன் கைது
admin - 0
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மீது பெட்ரோல் குண்டு வீசிய மகன், மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர், ஹரிதாஸ் 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர் சரஸ்வதி.
இவரது மகன் தினேஷ்(25). இவர் ரஜித்தா(25) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். தற்போது அமைந்தகரை எம்.எம். காலனியில் வசித்து வருகிறார்.
பணம்...
சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: திமுக எம்.பி. புகாருக்கு அதிகாரிகள் மறுப்பு
admin - 0
சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில், மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தியை திணிக்கும் விதத்தில் இந்தி மொழி இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியை இந்திய விமான நிலைய ஆணையம் புறக்கணிப்பது சரியானது இல்லை...
அனைத்து கட்சி கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அழைப்பு
admin - 0
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள், கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டியும், ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும்,...










