தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 11) பெரும்பாலான இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில்...
பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று; 2 வாரங்களில் பரிசோதனை: பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் விளக்கம்
admin - 0
தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், அப்பொருட்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பரிசோதித்து பார்க்க இருப்பதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், சென்னையை சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும்...
சென்னை | தலைமைச் செயலகம் எதிரே விபத்து: பள்ளி வேன் உள்பட 3 வாகனங்கள் மோதல் – 7 மாணவர்கள் காயம்
admin - 0
தலைமைச் செயலகம் எதிரே பள்ளி வேன் உள்பட அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். சென்னை ராஜாஜி சாலையில் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிரே சாந்தோமில் உள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தலைமைச் செயலகம் எதிரே செல்லும்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ இருவருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ-க்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற...
தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும், அதை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) சார்பில், 54-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் பேசியதாவது:
தொழிலகங்களில் சிறு விபத்து நடந்தாலும்,...
மூத்த தலைவர் பழ.நெடுமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தனது 93-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், ‘தமிழின உரிமைப் போராளியாக பழ நெடுமாறன் ஆற்றி வரும் தொண்டு தொடர்க’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் வாழ்த்துக்கு பழ.நெடுமாறன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதேபோல்,...
ஜார்ஜ் டவுனில் ரூ.9.85 கோடியில் புனரமைக்கப்பட்ட புராதனமான பதிவுத்துறை கட்டிடத்தில் அலுவலகங்கள் திறப்பு
admin - 0
சென்னை ஜார்ஜ்டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட புராதனக் கட்டிடத்தில் பதிவுத் துறை அலுவலகங்களை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
பதிவுத் துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனக் கட்டிடம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இக் கட்டிடம் கடந்த 1864-ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டிடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது.
இப்புராதன கட்டிடம் மெட்ராஸ் நாட்டு தளக்கூரை (Madras...
திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தையின் பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’
admin - 0
திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தைக்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயரிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருத்தணியில் நீண்ட காலமாக காமராஜர் பெயரில் காய்கறி சந்தை இயங்கி வந்தது.
இச்சந்தை இடித்து அகற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக சந்தை கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் வைக்க நகராட்சி மன்ற கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நாம்...
கோடை காலத்தை ஒட்டி ஆவின் மோர், ஐஸ் கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினசரி 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பல வகைகளாக பிரிக்கப்பட்டு...
பாலியல் வன்கொடுமைக்குள்ளான அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூலம் வெளியானது ஜீரணிக்க முடியாதது: பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு
admin - 0
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொது வெளியில் வெளியானது ஜீரணிக்க முடியாத ஒன்று. அதை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர்...










