Google search engine
தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்​காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரை செய்​தது சட்​ட​விரோதம் என்று உச்ச நீதி​மன்​றம் முக்​கிய தீர்ப்பை அளித்​துள்​ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்​கறிஞர்​கள் தெரி​வித்த கருத்து: மூத்த வழக்​கறிஞர் கே.எம்​.​விஜயன்: இதில் புதிய விஷ​யம் ஒன்​றும் இல்​லை. அரசி​யலமைப்​பு சட்​டம் என்ன சொல்​கிறதோ அதைத்​தான் உச்ச நீதி​மன்​ற​மும் தனது தீர்ப்​பில் கூறி​யுள்​ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்​டுமின்றி...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் இது… கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் தேதியன்று...
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஏப்.9) தொடங்கினர். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட...
தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊனமுற்றோர்' என்ற சொல்லையே தவிர்த்துமாற்றுத் திறனாளிகள்' என குறிப்பிட்டதோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார். மேலும், அத்துறைக்கு அவரே பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். அதேபோன்று, தற்போதும்...
‘சட்டப்பேரவையில் என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் பேரவைத் தலைவர் தடுக்கிறார்’ என தவாக தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடியில் மீனவர் நலத்திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லி, மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையில் இப்படி செய்திருக்கிறதே, தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? என்று சில கேள்விகள் குறித்து பேச எழுந்த...
எஸ்​ஆர்​எம் தமிழ் பேரா​யம் நடத்​திய சொல் தமிழா சொல் 2025 பேச்​சுப்​போட்​டி​யில் வெற்​றி​யாளர்​களுக்கு பரிசு வழங்​கும் விழா​வில் பேசிய பாஜக மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, சமூக வலை​தளங்​களில் பேசுவதை​விட மாணவர்​கள் பொது​வெளி​யில் தங்​கள் கருத்​துகளை வெளிப்​படை​யாக பேச வேண்​டும் என்று அறிவுறுத்தி உள்ளார். தமிழகம் முழு​வதும் உள்ள கல்​லூரி மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் பேச்​சுத் திறன்​மிக்க மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​குவிக்​கும் உயரிய நோக்​குடன் அனைத்து மாவட்​டங்​களும் 9 மண்​டலங்​களாகப்...
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 2 வாரங்களாக தொழில்நுட்பக் கோளாறு பிரச்சினை காரணமாக, தமிழகம் முழுவதும் வாகனப் பதிவுச் சான்றுக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். மோட்டார் வாகனச் சட்டப்படி, புதிய வாகனங்களை பதிவுச் சான்று பெற்ற பின்னரே சாலையில் ஓட்டவேண்டும். இந்தச் சான்றை பெற இணையவழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக வாகன விற்பனை முகவர்களே உரிமையாளர் விவரங்களை பெற்று, உரிய கட்டணங்களை செலுத்தி இணையவழியாக விண்ணப்பம்...
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின்போது அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசும்போது, “சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவரது பிறந்த ஊரான தேனி மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கு முதல்வர் ஆவன செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க...
திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ரூ.2 கோடி செலவில் முதல்வர் திறனகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்...