Google search engine
தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத் தேவையில்லை. மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999-ல் சென்னையில்...
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் வரும் 24-ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத் துறையில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியரின் முதுமை கால வாழ்வாதாரம் கருதி, சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இன்றைய சூழலில்...
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா, சென்னை, வடபழனியில் உள்ள எஸ் ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மகளிர் திருவிழா நிகழ்ச்சியில் துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். விழாவை, மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மருத்துவர் அமுதா ஹரி...
குறுகிய, நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வாகனம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் செயல்படுகிறது. இதனால், பகுதி முழுவதும் தபால்கள், பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், குறுகிய மற்றும் நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை திறமையாக கொண்டு செல்ல ஏதுவாக புதிய வாகனம்...
ஆயிரம் ஆண்டுகள் பழமையான 39 கோயில்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு ரூ.72.80 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம் பிடித்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 46 மாதங்களில் ரூ.74.51 கோடி மதிப்பீட்டில் 114 புதிய மரத்தேர்கள் செய்திடவும், ரூ.16.20 கோடி மதிப்பீட்டில் 64...
வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல்...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை...
ஹைப்பர் லூப் திட்டத்துக்கான மின்னணு தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐ.சி.எஃப்-ல் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விமானத்தைவிட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ரயில்வே துறை நிதியுதவியுடன் சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தையூரில் உள்ள டிஸ்கவரி சைட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள...
உடல்வலி நிவாரண மாத்திரைகைளை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்த மும்பையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளர். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்படையினர், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூக்கடை போலீஸார் நேற்று முன்தினம் காலை சென்னை, மெமோரியல் ஹால் ரோட்டில் உள்ள...
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார்....