முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம-க்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கக்கூடிய நிலையில் 3 இடங்கள் திமுகவுக்கும் ஒரு இடம் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம...
அகில பாரத வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) தென் தமிழக இணைச் செயலாளர் ஜெ.டி.விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக கூறிக்கொண்டு, தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் மாணவர்களிடம் தவறான கருத்துகளைத் தெரிவிக்கும் தவெக தலைவர் விஜய்யை ஏபிவிபி கண்டிக்கிறது.
அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்மறை எண்ணங்களை புகுத்தி, அரசியல் பேசி, மாணவர்களிடம் வன்முறையை தூண்டி வருகிறார் விஜய். பள்ளி...
மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்தித்து பேசினார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் 5 இடங்கள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டன. ஒரு மாநிலங்களவை இடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதிமுக அதற்கு மறுப்பு தெரிவித்தது.
தற்போது உறுதி அளித்தபடி தங்களுக்கு ஓரிடத்தை அதிமுக வழங்க வேண்டும் என...
திமுக கூட்டணியில் விசிக நீடித்து நிலைக்குமா நிலைக்காதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை முனவைத்து திமுக-வுக்கும் விசிக-வுக்கும் கசகல் வெடித்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலையோரத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அப்பகுதியில் உள்ள பட்டியலினத்து மக்கள் முடிவெடுத் தார்கள். இதற்காக சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையும் தயாரானது. இந்த நிலையில் மே 23-ம் தேதி, கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள மங்களாகோவிலில் மாநில...
பழனிசாமியை எதிர்த்து செல்வகணபதியை நிறுத்துகிறதா திமுக? – சிவலிங்கத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதன் பின்னணி
admin - 0
ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் திமுக மும்மதத்துக்கும் இடமளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை வேட்பாளராக்கியதில் திமுக-வுக்கு வேறொரு முக்கிய கணக்கும் இருக்கிறது என்கிறார்கள்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை தலைமை தனக்கு ஒதுக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்றதும் சற்றே அப்செட் ஆனவர், கட்சி நவடிக்கைகளில்கூட பிடிப்பில்லாமல் தான் இருந்தார். அப்படி இருந்தவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்து உற்சாகப்படுத்தி...
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துவதுடன், மகிழ்ச்சியாக இருந்து நாட்டுக்கு மேலும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி: அரசில் சக ஊழியராக இருக்கும் எல்.முருகன், தனது அர்ப்பணிப்பான...
அரசியலில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் மக்கள் நம்புவார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
admin - 0
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு...
பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் அரசு பேருந்துகளுக்கான கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்பின், அண்டை மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், தமிழகத்தில் கட்டண உயர்வு இல்லை. இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி,...
தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்
admin - 0
தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 'அறிஞர்கள் அவையம்' நிகழ்வின் தொடக்கவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, ‘அறிஞர்கள் அவையம்’ திட்டத்தின் பிரத்யேக இலச்சினையை அறிமுகப்படுத்தி...
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வுகளான காய்கறி கண்காட்சி, மலர்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு முதல்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மலைப் பயிர்கள் கண்காட்சிக்காக, காட்டேரி பூங்காவில் இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு...










