Google search engine
நாம் தமிழர் கட்சி சார்​பில் ஆக.17-ம் தேதி மரங்​களின் மாநாடு நடை​பெறும் என்று அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​னார். 2018-ல் திருச்சி விமான நிலை​யத்​தில் மதி​முக, நாம் தமிழர் கட்​சி​யினர் இடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பான வழக்கு விசா​ரணை திருச்சி மாவட்ட 2-வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் நேற்று நீதிபதி கோபி​நாத் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. இதில் சீமான் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். வழக்​கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்​கப்​படும்...
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும் முன்பு, கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற கூறியதாகவும் பேசியிருந்தார். இந்நிலையில், சிவா எம்.பி.யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது...
சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய,...
திமுக-வில் வைகோவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவர் மீது கொலைப்பழி சுமத்தினார் கருணாநிதி. அப்போது அதைச் சொல்லி ஆதங்கப்பட்ட வைகோ, இப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தி அவரை நொறுங்கிப்போக வைத்திருக்கிறார். “இதைவிட, தலைவர் வைகோ விஷத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தாலும் சந்தோசமாக குடித்திருப்பேனே” என மருகிக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக...
 “காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி...
பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்று ஆதரவு தெரி​வித்​தனர். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணியை மாவட்ட நிர்​வாகம் தொடங்​கி​யுள்​ளது. 19 பேரின் நிலங்​கள் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த விமான நிலை​யத்​துக்​கான பணி​கள் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்து,...
 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. கேட​யத்​தில் இடம் பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ்...
சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறு​பான்மை சமூகத்​தைச் சேர்ந்​தவர். இதனால், சிறுபான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜககளமிறக்​கு​கிறது. விஜய் வீட்​டில் நடை​பெற்ற வரு​மான வரிசோதனை குறித்து இது​வரை சரி​யான தகவல்​கள் வெளி​யிட​வில்லை. வரு​மான வரித்​துறை அதிகாரி​யாக இருந்த அருண்​ராஜுக்​கு, தவெக கட்​சி​யில் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. சாத்​தான்​குளம் சம்​பவத்​தில்...
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை மாவட்ட திமுக-வும் கிறுகிறுத்துக் கிடக்கிறது. அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுக-வைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், மாநகர திமுக செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் இருக்கிறார்கள். ஏற்கெனவே, சேர்மனாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் முத்துத்துரை யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ‘கணக்காக’ செய்து...
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அண்​மைக்​கால​மாக பொது இடங்​களில், ‘பொன்​முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்​காக பேசி எரிச்​சலை உண்​டாக்​கி​னார் பெரிய​வர் கல்​யாணசுந்​தரம். இது சமூக ஊடகங்​களில் வைரலாகி சர்ச்​சை​யான நிலை​யில், கல்​யாணசுந்​தரத்​தால் அழுத்​திவைக்​கப்​பட்ட...