Google search engine
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான செயற்கைக்கோள்...
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின்...
திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர்...
மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். மும்பை, ஹைதராபாத் ஆகிய...
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது...
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாடு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தது. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின்...
ஆகஸ்ட் மாதம் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் மற்​றும் இலவச டோக்​கன்​களை திருப்​பதி தேவஸ்​தானம் தனது இணை​யதளத்​தில் வெளி​யிட உள்​ளது. அதன்​படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்​கல் முறை ஆர்​ஜித சேவை​களுக்கு பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை,...
இளம் வயதில் தலை முடி கொட்​டு​வ​தால், தம்மை அழகாக்​கிக் கொள்ள ஆண், பெண் இரு​பாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்​கின்​றனர். இதற்​காக உ.பி.யின் கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​து​வ​மனைக்கு இளம் பொறி​யாளர்​கள் 2 பேர் சிகிச்​சைக்​காக வந்​துள்​ளனர். அவர்​களில் உ.பி.​யின் பரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்​பர் 18-ல் அனுஷ்கா மருத்​து​வ​மனை​யில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்​றார். ஆனால்...
 கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துவருகிறது. குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே மேக்கேதாட்டு, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில்...