சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது: பஹல்காம் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
admin - 0
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பஹல்காம் பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. எனவே அப்பகுதிவாசிகள் குதிரைகள் மூலம் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம்தான் அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் 6 ஆயிரம் குதிரைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காமிலிருந்து பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு...
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நெரிசல் மரணங்கள் தொடர்பாக எனக்கே தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது 3.15 மணிக்கு சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் எனக்கு மாலை 5.45 மணிக்குத்தான் தகவல் கிடைத்தது.
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகவே உளவுத் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதில் அரசு...
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரினா, கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது. . உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்று எம்எஸ்சி ஐரினா.
இது 24,346 டிஇயு (20 அடிக்கு சமமானது) திறன் கொண்டது. 26 அடுக்குகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல் நேற்று காலை 8 மணியளவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் வந்தடைந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து...
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை: காதலனுடன் வாழ ஆசைப்பட்டு கூலிப்படை வைத்து கொன்ற மனைவி
admin - 0
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது காதலன் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11-ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து புதுமணத் தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு...
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்றும், தற்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிஹார் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து அடிப்படை ஆதாரமில்லாமல்...
இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் இந்திய விமானப் படையின் ட்ரோன்கள், உளவு விமானங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.
தற்போது இந்திய விமான படையில் பாம்பார்டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்ஸ்டீரிம் ஜி100 ஆகிய...
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம்.
முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து...
கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை
admin - 0
கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும்...
உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கோயிலுக்கு வந்த பெண் நீதிபதியிடம் தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 10 பெண்கள் கொண்ட திருட்டு கும்பலை போஸீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறியுள்ளதாவது: மத்திய பிரேதச மாநிலம் உஜ்ஜைனில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றுபவர் பிரேமா சாகு. இவர், பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ ராதா...
அசாமில் கடந்த 2021-ம் ஆண்டு கால்நடை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கால்நடைகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு முழு தடையும் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் பக்ரித் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது அசாம் மாநிலத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 16...










