சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தத்தை பரப்புவோர் மீதும் யுஏபிஏ பாயும்: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி
admin - 0
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அஹெங்கர் மீது யுஏபிஏ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த...
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது, ஜெகன் கட்சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலமாக தரம் குறைந்த மதுபானங்களை மார்க்கெட்டில் விற்றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜெகன் ஆட்சியில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்பனையால் நஷ்டம் ஏற்பட்டது சிறப்பு விசாரணை...
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: 35 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
admin - 0
பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் விளைவாக 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6.6 கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இது, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25...
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்தது. இவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் ஷுபன்ஷூ சுக்லா.
அமெரிக்காவின் ஆக்ஸியாம் என்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு 4 வீரர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா மேற்கொண்டது. இந்த குழுவில் இந்தியா சார்பில் செல்ல ஷுபன்ஷு சுக்லா தேர்வானார்.
இவர்கள் ஸ்பேஸ்...
‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!
admin - 0
“இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” என்று கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த...
ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்டிகள், 15 ஆயிரம் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும், குறைந்த ஒளி வசதி இருந்தாலும், இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மிகவும் தெளிவுடன் இருக்கும்.
அண்மையில் பானிப்பட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை...
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
admin - 0
மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்) குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி), இணையவழி பண மோசடி தொடர்பான தகவல்களை திரட்டியது. இதன்படி, இந்த மோசடிகள் பெரும்பாலும் பாதுகாப்புமிக்க இடங்களில் இருந்து நடத்தப்படுவதும், சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்தப்பட்ட பகுப்பாய்வில், இதுபோன்ற குற்றங்களால் மாதந்தோறும் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 5...
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால்...
உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார்.
ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து...
ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.
20 வயதான அந்த மாணவி, பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த கல்லூரியின் கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக...





