உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் இந்தியா-ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை (ஐஆர்ஆர்பிஎல்) உள்ளது.
இங்கு ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்கு ‘ஷேர்’ என பெயரிடப்பட்டது. இந்த துப்பாக்கி ஒரு நிமிடத்தில் 700 குண்டுகளை, 800 மீட்டர் இலக்குவரை சுடுகிறது. இந்த நிறுவனத்தில் ராணுவத்தின் முப்படைகளுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வழங்க ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதுவரை இந்நிறுவனம் 48,000 துப்பாக்கிகளை...
நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதையடுத்து இவருக்கு வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது.
பட்டியல் சாதியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள நபர்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் சிங்கூர் பாபா ஈடுபட்டதையடுத்து அவர் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் நீத்து என்கிற...
மகாராஷ்டிராவில் கார், பைக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், டிண்டோரி நகருக்கு அருகே புதன்கிழமை நள்ளிரவு சாலையில் சென்று கொண்டிருந்த காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதையடுத்து இரு வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்வப இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற போலீஸாரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில்...
ஒடிசாவின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆர்ஜேடி உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் புவேனஸ்வர், கட்டாக் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சாலைகள்...
இந்தியாவுக்கு துரோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை
admin - 0
இந்தியாவுக்கு துரோகம் செய்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய மக்களுக்கும், அதன் எல்லைக்கும், அதன் பாதுகாப்பு படைகளுக்கும் துரோகம் செய்யக் கூடாது...
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம்: ஜூலை மாதம் முதல் அமல்
admin - 0
பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹாரில் மின்சார கட்டணம் ஏற்கெனவே குறைவாக உள்ளது.
இந்நிலையில், வீடுகளுக்கு மாதத்துக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இது வரும்...
சட்டவிரோத மதமாற்றத்தில் நடைபெறும் நிதி முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேசம், மும்பையில் 14 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரிமுல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்கூர் பாபா என அழைக்கப்படுகிறார்.
இவரது தலைமையிலான குழுவினர் பல்ராம்பூரில் உள்ள சந்த் அவுலியா தர்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் மிகப் பெரிய கூட்டங்களை அடிக்கடி கூட்டி சட்டவிரோத மதமாற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்....
டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு...
ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று பிஹார், மேற்கு வங்கம் செல்கிறார்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிஹார், மேற்குவங்கத்துக்கு செல்கிறார். அப்போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.
பிஹார் மாநிலம் மோதிஹரியில் இன்று காலை அரசு நலத்திட்ட விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது ரூ.7,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன்படி பிஹாரின் தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை அவர்...
தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி
admin - 0
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறும்போது, “தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக தனியான இடங்களைத் தேர்வு செய்து அமல்படுத்த வேண்டும்.
கண்ட இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது. இதுதொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதில் நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம். டெல்லி கிரேட்டர் நொய்டாவில் தெருநாய்களுக்கு வழங்க இதுபோன்ற உணவு...








