Google search engine
மலை​யாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்​தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்​னுடன் நட்​புடன் பழகிய அரசி​யல்​வா​தி ஒருவர் எனக்கு ஆபாச​மான செய்​தி​களை அனுப்​பி, ஓட்​டல் அறைக்கு அழைத்​தார். காங்​கிரஸில் இருப்​பவர்​கள் உட்பட மேலும் பல பெண்​களுக்கு இது​போன்ற அனுபவம் ஏற்​பட்​டுள்​ளது” என்று குற்றம்சாட்டினார். அரசி​யல்​வா​தி​யின் பெயரை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். என்​றாலும் அது பாலக்​காடு எம்​எல்​ஏ​வும் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வரு​மான ராகுல் தான் என...
சென்ற 2024-25-ம் நிதி​யாண்​டில் தேவையை விட அதிக ரத்​தம் சேகரிக்​கப்​பட்​ட​தாக நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மாநிலங்​களவை​யில் மத்​திய சுகா​தா​ரத் துறை இணை​யமைச்​சர் பிர​தாப் ராவ் ஜாதவ் எழுத்​து​மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25-ம் ஆண்​டில், இந்​தியா 1,46,01,147 யூனிட் ரத்​தத்தை சேகரித்​தது. இது ஆண்​டுத் தேவை​யான 14.6 மில்​லியன் யூனிட்​களை விட அதி​க​மாகும். மேலும் 2023-ம் ஆண்​டில் சேகரிக்​கப்​பட்ட 1,26,95,363 யூனிட் ரத்​தத்தை விட 15% அதி​க​மாகும். இந்​தி​யா​வில்...
 மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த திருநங்கை மருத்​து​வரின் கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும், பெயர் மற்​றும் பாலினத்தை ஒரு மாதத்​துக்​குள் மாற்றி வழங்​கும்​படி சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மணிப்​பூரைச் சேர்ந்​தவர் பியான்சி லாய்​ஷ்​ராம். இவர் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்​து​வர். போபாய் லாய்​ஷ்​ராம் என்ற பெயரில் ஆணாக இருந்​தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்​கை​யாகி மாறி அந்த சான்​றிதழ் மூலம் ஆதார் எண்,...
கடந்த 1975 முதல் 1977 வரையி​லான அவசரநிலை காலத்​தில் அப்​போதைய இந்​திரா காந்தி அரசின் அத்​து​மீறல்​கள், முறை​கேடு​கள் குறித்து நீதிபதி ஷா ஆணை​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. அதன் அறிக்கை நாடாளு​மன்​றத்​தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்​கல் செய்​யப்​பட்​டது. குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்தை அமல்​படுத்​தி​ய​தில் பலத்தை பிரயோகித்​தது குறித்​தும் அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான விவரத்தை மக்​களவை​யில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் பகிர்ந்து கொண்​டார். இது...
திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ கோதண்​ட​ராமர் கோயி​லில் நித்ய அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் ரூ.4 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. கடந்த ஜெகன் ஆட்​சி​யில் திரு​மலை​யில் அவரது கட்​சிக்​காரர்​கள் 12 பேருக்கு ஓட்​டல்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்த ஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டு, இ-டெண்​டர் மூலம் ஓட்​டல்​களை ஒதுக்கி உள்​ளோம். ஸ்ரீவாணி...
மத்​தி​ய பிரதேச மாநிலம் ரீவா​வில் உள்ள கோர்கி கிராமத்​தில் பழமை​யான காஜி மியான் தர்கா உள்​ளது. குர் காவல் நிலைய பகு​தி​யில் அமைந்​துள்ள இந்த தர்கா​வுக்​குள் அடை​யாளம் தெரி​யாத ஒரு கும்​பல் இரவு நேரத்​தில் புகுந்​துள்​ளது. உள்ளே இருந்த தர்​கா​வின் மஸார் எனும் சமா​தியை கும்​பல் சேதப்​படுத்​தி​விட்டுச் சென்​றுள்​ளது. மறு​நாள் காலை தர்கா சேதம் அடைந்​துள்​ளதை பார்த்து உள்​ளூர் முஸ்​லிம்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் ஏற்​பட்​டது. உள்​ளூர் மக்​கள்...
குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார். அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க...
 மும்​பை​யில் தொடரும் கனமழை காரண​மாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பை​யில் கடந்த 4 நாட்​களாக கனமழை கொட்​டித் தீர்த்து வரு​கிறது. நேற்று பெய்த கனமழை காரண​மாக சாலைகளில் வெள்​ளம் புரண்​டோடியது. மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின்...
 திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்​ளனர். இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை விஜிலென்ஸ் அதி​காரிகளிடம் புகார்...
நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர். தற்​போது வீட்டு உபயோகப் பொருட்​களை தவிர்த்து வியா​பாரப் பொருட்​ளுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது. இந்த சூழலில், இனி ரயில் பயணி​கள் அனை​வருக்​கும் சுமை கட்​டுப்​பாடு விதிக்​கப்பட உள்​ளது. தற்​போது விமானப் பயணி​களுக்கு குறிப்​பிட்ட எடைக்கு மேற்​பட்ட சுமை​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது....