பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜக.,வின் அச்சுறுத்தல் காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர்...
புனே பேஷ்வா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை: கோமியம் தெளித்து இந்துத்துவாவினர் போராட்டம்
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சனிவார் வாடாவில் வரலாற்று சிறப்புமிக்க பேஷ்வாவின் கோட்டை அமைந்துள்ளது. இதனுள் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
புனேவின் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மேதா குல்கர்னி தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார். வரலாற்று பாரம்பரியம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சனிவார் வாடா வளாகத்தின், பிரார்த்தனை தளத்தில் கோமியம் மற்றும் பசுஞ் சாணம்...
திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 3 நாட்களாக ஓயாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த பக்தர்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மலைப்பாதையில் 15-வது வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் வந்து விழுந்தன. எனினும் இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்
admin - 0
சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆஞ்சநேயுலு (85). இவர் கூலி வேலை செய்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஞ்சநேயலுவின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்தார். இவருக்கு நாகேஸ்வர...
சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பல ஆண்டுகளாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். என்றாலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் இந்த இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ...
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா...
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத்...
‘ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது’ – பிரதமர் மோடி நெகிழ்ச்சி
admin - 0
இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) வெளியிட்டுள்ளது.
ஆர்ஜேடி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அக்கட்சியின் இளம் தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ரேணு குஷ்வாஹா, பிஹாரிகஞ்ச் தொகுதியிலும், அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு...
மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் - பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், "மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம்...










