Google search engine
நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்​சில்​-கப்​லாங் (என்​எஸ்​சிஎன்​-கே) மற்​றும் அதன் அனைத்து பிரிவு​கள், முன்​னணி அமைப்​பு​களை 5 ஆண்​டு​களுக்கு சட்​ட​விரோத அமைப்​பாக மத்திய உள்​துறை அமைச்​சகம் அறிவித்துள்ளது. வரும் செப்​டம்​பர் 28 முதல் இது அமலுக்கு வரு​கிறது. உல்ஃபா (ஐ), பிரி​பாக், பிஎல்ஏ போன்ற பிற சட்​ட​விரோத அமைப்​பு​களு​டன் என்​எஸ்​சிஎன்​-கே இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இந்த அமைப்​பிடம் இருந்து பெரு​மளவு ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. மணிப்​பூரில் இந்​திய ராணுவ வீரர்​கள்...
உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது. அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும். உ.பி.​யின் அரசு...
ராஷ்டிரிய ஜனதா தள கட்​சித் தலை​வர் லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்​போது கட்​சி​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் தந்தை லாலு, சகோ​தரர் தேஜஸ்வி உள்​ளிட்​ட​வர்​களு​டன், ரோஹிணி ஆச்​சார்​யா​வுக்கு கருத்து வேறு​பாடு என்ற ரீதி​யில் கடந்த சில நாட்​களாக செய்​தி​கள் வந்த வண்​ணம் உள்​ளன. இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்​த​வித அரசி​யல் லட்​சி​யங்​களும் இல்​லை. அதே​போல் மாநிலங்​களவை...
அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.5,100 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். குறிப்​பாக அருணாச்சல பிரதேசத்​தில் இரு நீர் மின் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் அருணாச்சல பிரதேசத்​தின் தவாங்​கில் 9,820 அடி உயரத்​தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்​க​வும் அவர் அடிக்​கல் நாட்டினார். விழா​வில்...
 குடியரசுத் துணைத் தலை​வ​ராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்​சி​யாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் உரை குறித்த புத்தக வெளீ​யீட்டு விழா​வில் நேற்று கலந்து கொண்​டார். குடியரசு துணைத் தலை​வர்​களாக இருந்த எம்​.வெங்​கையா நாயுடு மற்​றும் ஜெகதீப் தன்​கர் ஆகியோரும் தங்​களது பதவிக்​காலத்​தில் பிரதமர் மோடி குறித்த புத்​தகங்​களை வெளி​யிட்​டுள்​ளனர். மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகம் டெல்​லி​யில் நேற்று ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில்...
சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பிரி​வினை​யின் போது தங்​கள் குடும்​பங்​கள் எல்​லா​வற்​றை​யும் விட்​டு​விட்டு இந்​தி​யா​வுக்கு எப்​படி வரநேர்ந்​தது என்​பது குறித்து சிந்தி நண்​பர்​களிடம் ஏராள​மான கதைகளை கேட்​டிருக்​கிறேன். இந்​தி​யா​வில் அவர்​கள் தங்​கள் வாழ்க்​கையை கட்​டி​யெழுப்பி சிறப்​புடன் உள்​ளனர். அதேபோன்​று, விசாவுக்​கான கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்ள நிலை​யில் அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய தொழில் வல்​லுநர்​கள் தங்​கள் தாய்​நாட்​டுக்கு திரும்​புவதை தீவிர​மாக பரிசீலிக்க வேண்​டும். பிரி​வினைக்​குப் பிறகு இந்​தி​யா​வில்...
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை...
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே...
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் விதித்தார். இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக...
அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்​டம்​பர் 22-ல் அருணாச்​சலப் பிரதேசம் மற்​றும் திரிபுரா மாநிலங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அப்​போது இரு மாநிலங்​களி​லும் ரூ.5,100 கோடிக்​கும் அதி​க​மான பல மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​வார். மேலும்,...