நாட்டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நாட்டில் கடல் வழித்தடம் மற்றும் நீர்நிலைகள் அதிகளவில் உள்ளன. விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதியாக கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்த ஸ்கைஹாப் ஏவியேஷன் என்ற நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே...
இந்தியா முழுவதும் பிஹு, விஷு, வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் கோலம் பூண்டுள்ள இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் புதுப்பித்தல் உணர்வு நம்மை நிரப்புவது போல, இந்திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்றுப் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டது. குறிப்பாக, ஏப்ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள்...
மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி உண்ணும் பிராமணர்களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து, முதல்வர் மம்தா பிரச்சாரத்தில் பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காள மக்களின் உணவுப் பண்பாடு, குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்தமான மீன்...
அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அதற்குத் தடை ஏதும் இல்லை. அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம் சமூகம் பெரிய அளவில் உள்ளது. அவர்களைச் சாப்பிட வேண்டாம்...
பாஜகவின் 47-வது நிறுவன தின கொண்டாட்டம்: குஜராத், உ.பி. உட்பட 21 மாநிலங்களில் பாஜக, என்டிஏ ஆட்சி
admin - 0
மத்தியில் ஆளும் பாஜகவின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 21 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 1977-ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனசங்கம் ‘ஜனதா கட்சியுடன்' இணைந்தது. எனினும் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளின் காரணமாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி 'பாரதிய ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டது. கடந்த...
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மேற்கு...
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்கிளில் எவரெஸ்ட் அடிவார முகாம் (பேஸ் கேம்ப்) சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்கள் கடினமான பயணத்துக்கு பிறகு 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமை வெற்றிகரமாக சென்றடைந்தார். இந்தப் பயணத்தின்போது, அவர் மைனஸ் 12...
கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் விற்பனையகத்தில் புடவை வாங்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாததால் கடந்த 5 ஆண்டுகளாக வாடிக்கையாளர்ளுக்கு தலா...
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவுக்கான விமான டிக்கெட் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொதுவாக ஐக்கிய அரசு அமீரக தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய நகரங்களுக்கு வருவதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
போர் காரணமாக தற்போது விமான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் முதல்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மக்களவை செயலாளர் உப்தல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையரை...










