டெல்லியில் பிரபல சாமியாராக இருந்தவர் சைதன்யானந்தா பாபா என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி (62). இவர், பல கோடிகளில் நன்கொடைகள் பெற்று டெல்லியில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான ஆசிரமங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக 17 பெண்கள் டெல்லி போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.யின் ஆக்ராவில் போலீஸார் கைது செய்தனர்.
சைதன்யானந்தாவிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு...
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து மறைத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசோக் குமார் கூறியதாவது: மணமானதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து இளம்பெண் காணாமல்...
இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்
admin - 0
ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியா உலகத்துக்கு ஏராளமான விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால்,...
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல்...
மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணித்துள்ளனர். சம்பல் நதியின் மீது உள்ள பாலத்தின் மீது...
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலுள்ள பாலேஸ்வரி மாதா தேவி சிலைக்கு பக்தர்கள் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து உள்ளனர். புவானா பகுதியில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரி மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்புடைய கரன்சி நோட்டுகளால் நேற்று முன்தினம் பக்தர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளால் இந்த அலங்காரம்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார்.
‘‘தீவிரவாதம் இல்லாத அமைதி மண்டலமாக காசா மாற்றப்படும். ஹமாஸ் பிடியில்...
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது...
உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் மதத் தலைவர் தவுகீர் ராஸாவுக்குத் தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கான்பூர் மாவட்டத்தில் உள்ள ராவத்பூர் என்ற இடத்தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி, ‘ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் இந்த வாசகம் தாங்கிய பேனர்களையும் அங்கு நடைபெற்ற...
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு...










