Google search engine
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி.எழுத்தாளராகவும், சமூக சேவகராகவும், நன்கொடையாளராகவும் இருக்கிறார். தனது வாழ்க்கை அனுபவங்களை அவ்வப்போது சுதா மூர்த்தி வெளியிட்டு வருகிறார். அப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததை அவர் உருக்கமாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு முறை பயணம் செய்த போது சுதா மூர்த்தியின் கார் பழுதடைந்து நின்றுள்ளது.அதை பழுது பார்க்கும் வரையில்அருகில் இருந்த கோயிலில் இருங்கள் என்று கார் ஓட்டுநர் கூறியுள்ளார். அதன்படி அந்த...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர், சமூக செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார். “பிஹாரில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஜன சுராஜ் போட்டியிடும். இதில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள்” என ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தெரிவித்தார்.பிஹார் மாநிலம்...
சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ்ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்தசீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்தது. 4-வது வாய்ப்பு வரை நீரஜ் சோப்ரா 4-வது இடத்தில்தான் இருந்தார். 5-வது முயற்சியில் 85.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து கடைசி...
இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்தது. வக்புவாரியத்தில் முஸ்லிம் பெண்களைசேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம்...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்காக (இஸ்ரோ) மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இந்தியா இதுவரை 97 ராக்கெட்களை ஏவி யுள்ளது. மேலும் 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதைகளில் சுற்றி வரச் செய்துள்ளது.இஸ்ரோவுக்காக மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அதைவிட 2.54 மடங்கு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்நேற்று 25 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். இரு சகோதரர்கள் மற்றும் அந்த இருவரில் ஒருவரின் மனைவி என இந்த மூவரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இரு சகோதரர்களும் தலா 10...
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையை சேர்ந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது சிபிஐ காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரித்த...
 உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சா நகரில் பேக்கரி நடத்தி வந்த மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜு கான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜூலை...
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மம்தா பானர்ஜி கடிதத்தில் கூறியதாவது: இந்தியாவில் நாளொன்றுக்கு 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பல சமயங்களில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்படுகொலை செய்யப்படுகிறார். இந்த போக்கு திகிலூட்டுகிறது....
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல்போன பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடரும் நிலையில் அதில் சென்ற பயிற்சி விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையத்தில் இருந்து 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் காணாமல்போனது.இதையடுத்து விமானத்தை தேடும்...