‘நானும் மேட் இன் இண்டியா’ தான்: பிரான்ஸ் தொழிலதிபரின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி புன்முறுவல்
admin - 0
பிரான்ஸ் நாட்டின் விமான இன்ஜின் பழுதுபார்க்கும் நிறுவனமான சஃப்ரானின் ஆலை ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “விமான போக்குவரத்து துறையில் இந்தியா புதிய பாதையில் பயணிக்கிறது. விமான பராமரிப்பு, பழுது பார்ப்பு, புதுப்பித்தல் துறையில் உலகின் மையமாக இந்தியா உருவெடுக்க சஃப்ரான் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
சஃப்ரான் நிறுவன தலைவர்...
மத்திய பிரதேச மாநிலம் தர் மாவட்டம் லபாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தன்லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதிவாசி ஜதி சேவா சஹாகாரி சமிதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்துள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்துக்கு சென்றனர். அதிகாரிகள் 3 பிரிவாக சென்று கோவர்தன் லாலின்...
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட்டை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். அதோடு ஹைதராபாத்தில் ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். இது நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் என்ற சிறிய ரக ராக்கெட் கடந்த 2022 நவம்பர் மாதம்...
ஜம்முவின் ரியாஸியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பதிண்டி பகுதியில் வசித்து வந்தார். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் அந்த இளைஞர் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கைதான அந்த இளைஞர் மீது பிஎன்எஸ்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது.
இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர்...
ஹரியானாவில் கூடைப்பந்து கம்பம் சரிந்ததில் தேசிய அளவிலான வீரர் உயிரிழந்தார்.
ஹரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்தவர் ஹர்திக் ரதி (16). தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.இவர் நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒருமுறை மேலே எழும்பி கூடையின் விளிம்பை பற்றிய போது, கூடைப்பந்து கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. உடனே அருகில் இருந்த நண்பர்கள் ஹர்திக்கை மீட்டு...
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால...
வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைவு, இந்திய அரசியல் நிர்ணய சபையால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி,...
உத்தர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதிகாரி சுதிர் குமார் (25)...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள உரி நீர் மின் நிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு...
