'டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன....
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலங்கானாவில் இருந்து 5 பேரும் தமிழகத்தில் இருந்து இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கும் போதெல்லாம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திர முதல்வருக்கு சிபாரிசுகள் வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இம்முறை தெலங்கானாவை சேர்ந்த 5 பேருக்கு சந்திரபாபு வாய்ப்பு...
பாக்கியை செலுத்தாவிட்டால் வங்கதேசத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்படும்: அதானி பவர் நிறுவனம் கெடு
admin - 0
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் கோடா மின் உற்பத்தி ஆலையின் நிறுவு திறன் 1,496 மெகாவாட்டாக உள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா (1,244 மெகாவாட்), ராம்பால் (1,234 மெகாவாட்), எஸ்எஸ் பவர் I (1,224 மெகாவாட்) ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து...
இந்தியாவில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது: நம் நாட்டில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகபோராடி பல துன்பங்களை தாங்கி,பல ஆண்டுகள்...
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட தயாராக இருந்தது. அந்தவிமானத்தில் பயணம் செய்ய வந்த அமெரிக்காவைச் சேர்ந்தடேவிட் (55) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சேட்டிலைட் போன் ஒன்று இருந்தது.
இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது...
கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த தொழிலதிபர்
admin - 0
கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பத். பஞ்சாபில் இவருக்குச் சொந்தமான ஏராளமான பங்களாக்கள், வீடுகள், பண்ணை வீடுகள், எஸ்டேட்டுகள் உள்ளன. இந்நிலையில் தனது நிலத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பணிகளை, ரஜிந்தர் சிங் ரூப்ரா என்ற காண்டிராக்டரிடம் குர்தீப் தேவ் ஒப்படைத்தார் குர்தீப்...
விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது.
இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு விண்வெளிக் கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ககன்யான்...
தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் முதலாண்டு பிரம்மாண்ட தீபஉற்சவம் நடைபெற்றது. இதில் 25 லட்சம் அகல் விளக்குகளுடன், 1,121 வேதாச்சாரியார்களின் ஆரத்தி என 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
ராமாயணத்தில் ராமர் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பும் நாளை வடமாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசின் சார்பில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் முதலாண்டு தீப உற்சவம் நடைபெற்றது.
உ.பி.யில் பாஜக...
திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்...
4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்
admin - 0
இந்தியா - சீனா எல்லையில் படைகளை இரு தரப்பும் விலக்கிக் கொண்டுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல ரோந்து பணி தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 5 இடங்களில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவம் இடையே இரு நாட்டு எல்லை தொடர்பாக கடந்த 2020 மே, ஜூன் மாதங்களில் மோதல் ஏற்பட்டது. ஜூன் 15-ம் தேதி...










